மதுரை சித்திரைத் திருவிழாவில் வெளிநாட்டினர் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2012 10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 2ல் நடைபெறும் திருக்கல்யாணம், மே 3ல் தேரோட்டம், மே 6ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளில் 40 வெளிநாட்டினர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வெளிநாட்டு பயணிகள், ஓட்டலில் இருந்து அழைத்துச் செல்லப்படுவார்கள். சுற்றுலாத்துறையுடன் இணைந்து டிராவல் கிளப் மற்றும் இந்து அறநிலையத்துறை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.