பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
புதுச்சேரி: தியாகராஜரின் ஜெயந்தி விழா எல்லபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் நேற்று மாலை துவங்கியது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் மஹோத்சவ சபாவும், புதுச்சேரி இசை, நாட்டியக் கலைஞர்கள் சங்கமும் இணைந்து, 37ம் ஆண்டு தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. துவக்க விழாவிற்கு இசை நாட்டியக் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் கலைமாமணி ஜெகதீசன் தலைமை தாங்கினார். யோகாச்சாரினி மீனாட்சி தேவி பவனானி, விழாவைத் தொடங்கி வைத்தார். மாலை 4.30 மணிக்கு வினாயகர் பூஜை, ஸ்ரீராம சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத பட்டாபிஷேகம், சத்குரு தியாகராஜர் ஆவாஹன பூஜை நடந்தது. தொடர்ந்து, ஜோதிர்மயி மாணவர்கள், யோகாஞ்சலி மாணவர்கள், தேவசேனா பவனானி, டாக்டர் சீனுவாசன் ஆகியோரின் பாட்டுக் கச்சேரியும், டாக்டர் சந்திரசேகரன் மற்றும் பாரதி ஆகியோரின் வயலினிசை நிகழ்ச்சியும் நடந்தது. 30ம் தேதிவரை நடக்கும் இந்த விழாவில், தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.