பதிவு செய்த நாள்
30
ஜன
2020
11:01
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.
இங்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள், 40 நாட்களுக்கு ஒருமுறை, கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம்.வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, 20 இடங்களிலும், கருவறையில் இரண்டு இடத்தில், தட்டு காணிக்கை உண்டியலும் வைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள, 22 உண்டியல்களில் உள்ள காணிக்கைகள், நேற்று காலை எண்ணும் பணிகள் துவங்கின.
இந்த நிகழ்ச்சியில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் ஹரிஹரன், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணிகள் துவங்கின.இதில் கோவில்களின் ஆய்வாளர் சரண்யா, கோவில் ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் தன்னார்வ அமைப்பினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 26 லட்சத்து, 92 ஆயிரத்து, 172 ரூபாய் இருந்தது. 157 கிராம் தங்க நகைகளும், 81 கிராம் வெள்ளி நகைகளும் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் இருந்தன.