பதிவு செய்த நாள்
30
ஜன
2020
11:01
சேலம், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம நுாற்றாண்டு நிறைவு விழா, பிப்., 2ல் நடக்க உள்ளது. இதுகுறித்து, சேலம், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலர் சுவாமி யதாத்மானந்தர் அளித்த பேட்டி: சேலத்தில், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் அமைய, 1917ல், பலரின் நன்கொடையால், ஆசிரமம் உருவானது. 1919, பிப்., 2ல், ஆசிரம முதல் நிகழ்ச்சியாக, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. ஆசிரம நுாற்றாண்டு விழாவை கொண்டாட, கடந்த ஆண்டு, பிப்., 2ம் தேதி முதல், கருத்தரங்கம், சொற்பொழிவு, ரத யாத்திரை உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தற்போது, நுாற்றாண்டு நிறைவு விழா, பிப்., 2ல் நடக்கவுள்ளது. சுவாமி ஜோகிராஜானந்தர், திவ்ய நாமானந்தர், சித்கதானந்தர் ஆகியோர், வேதபாராயணம் நடத்துகின்றனர். ராமகிருஷ்ண மிஷன் துணைத்தலைவர், சென்னை ராமகிருஷ்ண மடத்தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், நுாற்றாண்டு விழா மலர், ஆசிரம வரலாறு புத்தகங்களை வெளியிட்டு, ஆசியுரை வழங்குவார். இவ்வாறு, அவர் கூறினார்.