மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது.மந்தாரக்குப்பம் தண்டாயுதபாணி கோவிலில் தை மாத செவ்வாய்கிழமையன்று, சண்முகா அர்ச்சனை நடைபெற்றால் நினைத்த காரியங்கள் நடக்கும்என்பது ஜதீகம்.அதன்படி, நேற்று முன்தினம் இரவு சிறப்பு யாகம், ஆறு விதமான புஷ்பங்கள், ஆறு விதமான நெய்வேத்தியங்கள், ஆறுவகையான பழவகைகள் கொண்டு லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.