வால்பாறை: வால்பாறை நகர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவிலில், 36 ஆம் ஆண்டு திருவிழா கடந்த, 21ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று மாலை நடுமலை ஆற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கும்பம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இன்று காலை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு காலை, 12:45 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது . இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து பகல், 12 30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . விழாவில் நாளை (31 ம் தேதி) காலை,12 :00 மணிக்கு கருப்புசாமிக்கு உச்சிகால பூஜையும், கெடாவெட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது மாலை,6 00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சிங்க வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் . விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, அர்ச்சுனன், சரவணன் உட்பட பல செய்து வருகின்றனர்.