ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2020 03:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா, இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா இன்று (ஜன.,30) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் தங்க கொடிமரத்தில் பட்டர்கள் கொடியை ஏற்றினர். கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது.