பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி அருகே உள்ள காரணீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் முடிந்து, வரும், 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி அருகே, காரணி கிராமத்தில் உள்ள மலைமேல் அமைந்துள்ளது, காரணீஸ்வரர் கோவில்.புதர்களுக்கு இடையே சுயம்புவாக உருவான சிவலிங்கத்திற்கு, பூஜை நடத்தப்பட்டு வந்த நிலையில், பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் கட்டும் பணி நடந்தது. திருப்பணிகள் முடிந்து வரும், 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதையொட்டி, வரும், 5ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கணபதி பூஜை, புண்யாவாசனம், கலசஸ்தாபனம், மாலை, 5:00 மணிக்கு வாஸ்து பூஜை, ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.மறுநாள், 6ம் தேதி காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, ரக் ஷாபந்தனம், அக்னிபிரதிஷ்டையும், மாலை, 5:30 மணிக்கு பரிவாரதேவதா மூலமந்திர ஹோமம் நடைபெற உள்ளது.வரும், 7ம் தேதி காலை, 6:00 மணிக்கு கலசபூஜை, தீக் ஷா ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலச உத்வாசனம் முடிந்து, 8:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.