பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
திண்டிவனம்; திண்டிவனம், இருதயபுரம் அருகே உள்ள செண்பக கணபதி சிவசாயி நாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு ஷீரடி நீலகண்டமகாதேவ் குருஜி தலைமையில், செண்பக கணபதி கோவில், பைரவர், சிவசாயி நாதர், கிருஷ்ணர், சனி பகவான் சன்னதிகளின் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சீத்தாபதி சொக்கலிங்கம், புதுச்சேரி எம்.எல்.ஏ., சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் சாவித்திரி, ஆச்சார்யா பள்ளி தாளாளர் கோபி, மணிலா நகர் அரிமா சங்க பொருளாளர் சுரஷே், ஆசிரியர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் பாஸ்கரன், அய்யப்பன், முரளிதரன், வழக்கறிஞர்கள் ஆதித்தன், மலர்மார்பன், செந்தாமரைக்கண்ணன், கமலக்கண்ணன், யாதவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை, ஷீரடி சிவ சாய்பாபா சேரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் ராஜசுதாகர், பொதுச்செயலர் சாய் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.