திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கன்னாரம்பட்டு கிராமத்தில் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாவது வேள்வி துவக்கம் மற்றும் 9:00 மணிக்கு தீபாராதனை, யாத்தராதானமும் நடந்தது.தொடர்ந்து 9:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 10:00 மணியளவில் பாலகணபதி, பாலமுருகன், பூரணி, புஷ்கலை உடனுறை படைகாத்த அய்யனார் சுவாமி கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.