பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை செல்வ விநாயகர் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 28ம் தேதி மாலை 6:00 மணிக்குமேல் அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி நடந்தது. 29ம் தேதி காலை 8:30 மணிக்கு லட்சுமி பூஜை, லட்சுமி ேஹாமம், கோ பூஜை, தன பூஜை மற்றும் மாலை 5:00 மணிக்கு புனித மண் எடுத்தல், அங்குரார்பணம், யாகசாலை முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது.தொடர்ந்து நேற்று காலை 5:45 மணிக்கு இரண்டாவது கால யாகசாலை பூஜை ஆரம்பமும், காலை 7:30 மணிக்கு நாடி சந்தானம், தத்துவார்ச்சனையும், 9:30 மணிக்கு கும்ப மூர்த்திகள் புறப்பாடு மற்றும் 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு கருவறை விநாயகர், திரவுபதி சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.