பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
ஓமலூர்: காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் தரினசம் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர், சிக்கனம்பட்டி ஊராட்சி, குப்பூர், காளியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 15ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை, தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக, கருவறையிலிருந்த உற்சவர் அம்மன் சிலைக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. தொடர்ந்து, மேள, தாளம் முழங்க, அம்மன் சிலையை, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, தேரில் வைத்தனர். பின், பக்தர்கள், வடம் பிடித்து, தேரை, கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். அப்போது, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30க்கும் மேற்பட்ட, ஓமலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உயிருடன்...: கோவில் வளாகத்திலுள்ள வன காளியம்மன் கோவிலில், பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றக்கோரி, உயிருடன் உள்ள கோழிகளை, அங்குள்ள திரிசூலத்தில் தொங்கவிட்டு வழிபட்டனர். இதன்மூலம், வேண்டுதல் நிவர்த்தியடையும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.