பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
மல்லசமுத்திரம்: மொரங்கம், அண்ணமார் சுவாமி கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், தங்காயி, அண்ணமார், குன்னுடையார், தாமரை நாச்சியார், கருப்பணார், கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 27ல் தொடங்கியது.
கடந்த, இரு நாட்களாக பல்வேறு சிறப்பு அபிஷேகம், நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 5:00 மணி முதல், 7:30 மணி வரை திருமுறை பாராயணம், நான்காம் கால யாக வேள்வி, நாடிசந்தானம், தத்வ யோகம், கடம் புறப்பாடு, காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. தொடர்ந்து, அன்ன தானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். தொட்டிச்சியம்மன் கோவில்: மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி அருகே திப்ரமகாதேவியில், தொட்டிச்சியம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களான கன்னிமார்சுவாமி, பெரியசாமி, தொட்டியன், மதுரைவீரன், காத்தவாரயன்சுவாமி, பட்டவன்சாமி ஆகியவற்றுக்கு திருப்பணிகள் முடிந்ததையடுத்து, கும்பாபி ஷேகம் இன்று நடக்கிறது. அதிகாலை, 5:30க்கு, எஜமானர் சங்கல்பம், இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், காலை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, 8:30 மணிக்கு தொட்டிச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், சுவாமி தரிசனம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்படுகிறது.