நெட்டப்பாக்கம்: கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் சாகை வார்க்கப்பட்டது.கோர்க்காடு, எல்லையம்மன் கோவிலில், தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சாகை வர்த்தல் விழா நடந்தது. அதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சாகை வார்க்கப்பட்டது.இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கோர்க்காடு கிராமத்தில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.