அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் சித்தகிரி முருகன் கோவிலில் படி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை ராமலிங்க சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து கொடி ஏற்றத்துடன் பஜனை குழுவினர்கள் ஊர்வலமாக சித்தகிரி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். மலை மீதுள்ள கோவிலின் அனைத்து படிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஓம்சக்தி அண்ணாமலை, செல்வராஜ், தர்மலிங்கம், விழாக் குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்