திருவெண்ணெய்நல்லுார்:தென்மங்கலம் சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த புவனேஸ்வரி பார்வதி அம்மை உடனாகிய சீதப்பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.அதையொட்டி, கடந்த 2ம் தேதி முளைப்பாலிகை எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, இறை ஆணை பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 3ம் தேதி பசு வழிபாடு, வேள்வி நிறையவி வழங்குதல், பேரொளி வழிபாடுகள் நடந்தன.தொடர்ந்து நேற்று 4ம் தேதி இரண்டாம் கால யாகசாலை வேள்வி நடத்தப்பட்டு, விமானக்கலசம் நிலை நிறுத்துதல், மருந்து சாத்துதல், பஞ்சமுக அர்ச்சனை ஆகியவை நடந்தது. இன்று 5ம் தேதி காலை 9:45 மணியளவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது