மயிலம்:மயிலத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் தை உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேக, வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு உற்சவர் வெள்ளி தேரில் வலம் வந்தார்.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார். இதில் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.