பழநி: பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் இன்று முதல் பிப்.10 வரை தங்கரத புறப்பாடு கிடையாது. தைப்பூச திருவிழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பிப்.11 வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். அலகு குத்தியும், காவடிகள், பால்குடங்கள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவையொட்டி தினமும் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் வாகனங்களில் உலா வருகிறார். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை (பிப்.7) இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது. பிப்.8ல் தேரோட்டம் நடக்கிறது. மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் காரணமாக வழக்கமாக இரவில் நடைபெறும் தங்கரத புறப்பாடு இன்று (பிப்.6) முதல் பிப்.10 வரை கிடையாது. பிப்.11 ல் தெப்ப உற்சவம் நடக்கிறது.