பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
திருவாரூர்: ஆலங்குடி அருகே ஞானபுரி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 33 அடி உயரமுள்ள மூலவர் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடந்தது.
ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள, ஞானபரி சித்ரகூட க்ஷ?த்திரத்தில், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில், நாளை காலை, 9:00 - 10:00 மணிக்குள், கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகளின் திருக்கரங்களால், மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யானைக்கு கஜபூஜை நடந்தது. ஆலங்குடி அருகே ஞானபுரி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 33 அடி உயரமுள்ள மூலவர் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடந்தது.
சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றால், நினைத்த காரியம் கைகூடும். நோய்கள் நீங்கும், தோஷங்கள் விலகும், இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஆஞ்சநேயர் எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை உண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனி பகவானையே, ஒருமுறை இவர் கலங்கச் செய்தார். இதனால், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இவரை வழிபடுவது சிறப்பு.