பதிவு செய்த நாள்
06
பிப்
2020
04:02
புவனகிரி: புவுனகிரியில் அவதரித்த மகான் ராகவேந்திரர் கோவில் பாலாலயம் செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. பக்தர்கள் நன் கொடை வழங்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலுார் மாவட்டம், புவனகிரியில் பிறந்த மகான் ராகவேந்திரசுவாமிகள் இல்லத்தை ஸ்ரீ ஹரி வாயு குருகளின் அனுக்கிர கத்தாலும், பக்தர்கள் பேராதராவலும் இயங்கி வரும் புனிதத்தொண்டு துாய அறக்கட்டளையால் நிர்வாகிக்கப்படும் மகானின் அவதாரத்ஸ்தல மிருத்திகா பிருந்தாவனத்தை கடந்த 2008 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் தேதி மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ 1008 ஸூஷமீந்திர தீர்த்த சுவாமிகள் வருகைதந்து கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார். ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு 33 ஆண்டுகள் பூர்த்தியானதாலும், சம்ப்ரோஷணம் செய்து 12 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதாலும் ஆலயத்தின் மூலஸ்தானம், முன் மண்டபம், சுற்றுச்சுவர் முதலியவற்றை மேம்படுத்தி சிறப்பிக்க பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மூலஸ்தானம், புதிய அன்னதான மண்டபம் மற்றும் யாத்திரீயர்கள் தங்கும் விடுதி போன்ற அத்தியவசியமான திருப்பணிகள் ரூ.5 கோடி உத்தேசமதிப்பில் துவங்கியுள்ளது. கட்டுமானப்பணிகள் முடிந்து, மந்திராலயத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ 1008 ஸூதேந்திர தீர்த்த ஸ்ரீபாதங்களவரான ஸ்வாமிகள் நேரில் பங்கேற்று குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தி வைக்க உள்ளார். எனவே பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்கி சிறப்பிக்க கோவில் நிர்வாகத்தை
ஸ்ரீராகவேந்திர சுவாளிகள் புனிதத்தொண்டு அறக்கட்டளை
எண் 4. ராகவேந்திரர் தெரு,
புவனகிரி,
கடலுார் மாவட்டம் - என்ற முகவரியிலோ அல்லது 04144 240500 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.