பதிவு செய்த நாள்
07
பிப்
2020
10:02
தஞ்சாவூர: தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷகேத்தை தொடர்ந்து, நேற்று முதல் மண்டலாபிஷேகம் துவங்கியது.
சித்திரை பிரமோற்சவம் விழா காரணமாக, மண்டலாபிஷேகம், 24 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் பெரியகோவிலில், 23 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம், வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, நேற்று முதல் மண்டலாபிஷேகம் துவங்கியது. மண்டலாபிஷேகம்மண்டலாபிஷேகம் வழக்கமாக, 48 நாட்களுக்கு நடைபெறும் நிலையில், சித்திரை பிரமோற்சவம் விழாவிற்கான, பந்தல் கால் நடுதல் மற்றும் காப்புக் கட்டுதல் போன்ற விழாக்கள் நடக்க இருப்பதால், மண்டலாபிஷேகம், 24 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.பிரதோஷம்கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக, டிச., 2ல், தேதி பாலாலயம் செய்யப்பட்டதால், பிரதோஷம் நடத்தப்படவில்லை. கும்பாபிஷேகம் விழா முடிந்த நிலையில், நேற்று மாலை, பிரதோஷம் நடைபெற்றது.இதில் நந்தி பெருமானுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.
பஞ்சமூர்த்திகள்: நேற்று முன்தினம் இரவு விநாயகர், வள்ளி - தெய்வனையுடன் சுப்ரமணியர், பெருவுடையார் உள்ளிட்ட சுவாமிகள் மற்றும் ராஜராஜசோழன், உலகமாதேவி, ராஜேந்திர சோழன் ஆகியோர் சிலைகளுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை காட்டப்பட்டது.பின், பல்வேறு வாகனங்களில், சுவாமிகள் எழுந்தருளி, ராஜவீதிகளில் உலா வந்தனர்.அப்போது மேளதாளங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.