பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று மாலை, நந்தியம்பெருமானுக்கு, 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. பெரியநாயகி தாயார், கரபுரநாதர் உற்சவர்களுக்கு, சிறப்பு திருமஞ்சனம் செய்து, காளை வாகனத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள், தோளில் சுமந்து, கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆத்தூர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், சொர்ணபுரீஸ்வரர், நந்தி பகவானுக்கு, பால், தயிர், நெய், மஞ்சள், சந்தனம், தேன் என, 16 வகை அபிஷேகம், நேற்று நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சொர்ணபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வெள்ளை விநாயகர் கோவிலிலுள்ள மகாலிங்கேஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.