பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு இன்று(பிப்.,7) காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலம் அருகே உள்ள திருவோணமங்கலம், ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயரமுள்ள விஷ்வரூப ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநோயர் சன்னதிக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர் சன்னதிகள் அமைந்துள்ளது. கோயில் திருப்பணிகள் ஸ்தாபகர் ரமணி அண்ணா மற்றும் ஸ்ரீ ஸ்ரீஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால் செய்து மு டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் கும்பாபிஷேகம் இன்று 7ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மீன லக்னத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன் னிட்டு கடந்த மாதம் 31 ம் தேதி தொடங்கி நேற்று காலை பத்தாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சக டபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகளை நடத்தினார்.;கோ பூஜைக்காக பாரம் பரியம் மிக்க தஞ்சாவூர் குட்டைமாடு வரவழைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சாஸ்திரிகள் வேத மந்திரங்கள் ஓத, சென்டை மேளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் ஆஞ்சநேய சுவாமிக்கு 300 லட்டர் பால், பஞ்சாமிர்தம், சந்தனத்தினால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்துவைத்தார். அதனைய டுத்து சுவாமிக்கு பூஷ்ப அலங்காரமும், தச பூஜையும் நடைபெற்றது. அதில் முதலில் கோ தரிசனம், இரண்டாவதாக கஜ தரிசனம், மூன்றாவதாக ராஜ தரிசனம், நான்காவதாக கன்யா தரிசனம், ஐந்தாவதாக சுஹாசினி தாம்பூலத்துடன் தரிசனம், ஆறாவதாக பட்ஷனத்துடன் தரிசனம், ஏழாவதாக அஷ்வ தரிசனம், எட்டாவதாக ஒட்டக தரிசனம், ஒன்பதா வதாக தர்பன தரிசனம், பத்தாவதாக கண்ணாடி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் விமானங்களில் கலச பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 11ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனையடுத்து சுவாமிகளுக்கு 500கிலோ எடையில் செய்யப்பட்ட வெள்ளி கவசம் சாத்தப்பட்டு ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகாஸ்வாமிகள் முன்னிலை யில் ஆஞ்சநோயர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ கோதண்டராமர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்தாபகர் ரமணி அண்ணா, திருமடத்து ஸ்ரீ காரியம் சந்திரமௌலி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில் மாலை கோயிலுக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆஞ்சநேயர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.