திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.