காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரை விழா, விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. அவர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரை அன்று, மூலவர் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள், 108 அந்தாதி பாடினர். பின், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.