கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அண்ணா நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது.இதனையொட்டி, கோமுகி நதிக்கரையிலிருந்து கச்சேரி சாலை, சேலம் மெயின் ரோடு வழியாக பால்குடம் ஊர்வலத்துடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விஷ்ணு துர்க்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு துர்க்கை யம்மனுக்கு சிறப்பு அலங் காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.