தியாகதுருகம்:கொங்கராயபாளையம் கிராமத்தில் நுாற்றாண்டு பழமையான அம்ச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலை புதுப்பிக்க ஊர் பொதுமக்கள் சார்பில் நிதி திரட்டி கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பணி துவங்கியது. 1.5 கோடி ரூபாய் மதிப்பில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், நவக்கிரக நாயகர், காத்தவராயன், வேட்டையனார், கருப்ப சுவாமி சன்னதி அமைக்கப்பட்டது.கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு மண்டப பூஜை, மூலமந்திர ஹோமம், யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு வேட்டையனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 10:15 மணிக்கு அம்ச மாரியம்மன் சன்னதியில் புனிதநீர் ஊற்றி தேவநாத பட்டர் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.