பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
சேலம்: கோட்டை மைதானத்தில், கருடவாகனத்தில் அருள்பாலித்த ஐந்து பெருமாள் சுவாமிகளை, கோவிந்தா கோஷம் முழங்க, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம், கோட்டை மைதானத்தில், ஆண்டாள் இளைஞர் குழுவின், 40ம் ஆண்டு பஞ்சகருட சேவையையொட்டி, நேற்றிரவு, கோட்டை அழகிரிநாதர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, சின்னதிருப்பதி வெங்கடேசப்பெருமாள், அக்ரஹாரம் லட்சுமி நாராயணர், அம்மாபேட்டை பாவ நாராயணர் ஆகியோரின் உற்சவர்கள், சிறப்பு பூஜைக்கு பின், கருட வாகனங்களில், விழா மேடையில் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள், கோவிந்தா கோஷம் முழங்க, தரிசனம் செய்தனர். இன்று காலை, ஸ்ரீவாரி விஸ்வரூப தரிசனம், தோமாலை, சாற்றுமுறையை தொடர்ந்து, மாலை, பெருமாள், ஆண்டாள் சீர்வரிசைகளுடன் உள்புறப்பாடு, நிச்சயதார்த்த விழா நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியிலிருந்து கல்யாண சீர்வரிசையுடன் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை, அழகிரிநாத பெருமாளுக்கு சாத்துபடி செய்யப்படும். தொடர்ந்து, அழகிரிநாத பெருமாள், கோதாலட்சுமி திருக்கல்யாணம், அன்னதானம் நடக்கவுள்ளது. மாலை ராஜ அலங்காரத்தில் பெருமாள், ஆண்டாள் திருவீதி உலா நடக்கும்.