சிங்கம்புணரி:சிங்கம்புணரி புதுவயல் ராயன் கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது, நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்று காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை காட்டப்பட்டது.தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பங்களை காப்பு கட்டியவர்கள் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து கோவில் கோபுர கலசம் உள்ள பகுதிக்கு சென்றனர்.காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பிரகார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராயன் கருப்பர் ஆலயத்தில் தீபாராதனை நடந்தது. அர்ச்சகர் சின்னையா சிவாச்சாரியார் மற்றும் சேவற்கொடி சிவாச்சாரியார்கள் தலைமையிலான குழு சிறப்பு பூஜை மற்றும்சிறப்பு வேள்வியை நடத்தியது