பதிவு செய்த நாள்
08
பிப்
2020
12:02
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே மீனாட்சி கார்டனில் உள்ள பழமையான ஞான விநாயகர், ராஜராஜேஸ்வரி திருக்கோயில்களில், தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
மீனாட்சி கார்டனில் பழமையான ராஜராஜேஸ்வரி அம்மன், ஞான விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், மீனாட்சி அம்பிகை சமேத சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரக தம்பதிகள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மன்கள், சப்தகன்னிகள், கருப்பராயர் ஆகிய சுவாமிகளுக்கு, தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு, தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி நேற்று ராஜராஜேஸ்வரி அம்மன், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். விழாவையொட்டி, 1008 முறை குங்குமம் கொண்டு பூஜை செய்யும் சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, பூக்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.