பதிவு செய்த நாள்
08
பிப்
2020
02:02
கூடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கூடலூர், குசுமகிரி குமரமுருகன் கோவிலில், குவிந்த பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.
கூடலூர், குசுமகிரி அருள்மிகு ஸ்ரீ குமரமுருகன் கோவிலில், தைப்பூசத் திருவிழா கடந்த 6ம் தேதி காலை 5:30மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம்; 10:30 முப்பது மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பகல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை முதல், சிறப்பு பூஜைகள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 5:30 மணிக்கு விளக்கு பூஜையும், தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று(பிப்.,8) காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நிகழ்ச்சிகள் நடந்தது. 9:00 மணிக்கு முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர். மாலையில் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலில் சந்தன மலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக நடந்தது.