பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
செஞ்சி:செஞ்சி சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வந்தனர்.
செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணகிரி மலை அடிவாரம் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது..இதை முன்னிட்டு இரவு சிறப்பு வேள்வியும், சாமி வீதி உலாவும் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வேள்வியும், சக்திவேல் அபிஷேகமும், 108 திரவிய அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு தீ மிதித்தல், செடல் சுற்றுதல், ஆகாய மாலை அணிவித்தல் ஆகியன நடந்தது. மாலை 4 மணிக்கு அலகு குத்திய பக்தர்கள் தேர், லாரிகளிலும், கிரேனிலும், தொங்கியும், இழுத்தும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.கொத்தமங்கலம் ரோடு, சிங்கவரம் ரோடு, காந்தி பஜார், திருவண்ணாமலை ரோடு, தேசூர் பாட்டை வழியாக சாமி ஊர்வலம் நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.