மானாமதுரை: மானாமதுரையில் சோணையா சுவாமி கோயிலில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சங்கத்தினர் மாலை 6 மணிக்கு ஊர்வலமாக சென்று சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.