பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
திண்டிவனம்:ராஜாங்குளக்கரை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம் ராஜாங்குளக்கரையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவலில், 82ம் ஆண்டு தைப்பூச பாற்காவடி மகோற்சவ விழா நடந்தது.விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு சக்தி கலச புறப்பாடும், தொடர்ந்து, பால்குட ஊர்வலமும், செடல் மற்றும் காவடியும் நடந்தது. பகல் 1:00 மணிக்கு, 108 சங்கு கலச பூஜைகளும், ஹோமங்களும், மகா தீபாரதனையும் நடந்தது.நேற்று மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், மகா தீபாரதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் முருகனடியார்கள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.