பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
விழுப்புரம்;விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பெருமாள் கோவிலில், மகா சுதர்சன ேஹாமம் நடந்தது.அரசமங்கலம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், 36 வது ஆண்டு திருநட்சத்திர வைபவ மகோற்சவம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி வீதியுலா, 9:30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணி முதல் 12:30 வரை உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம் நடந்தது.பின்னர், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, திருவாராதனம், சாற்று மறை, ஆரத்தி நடந்தது. மாலை 4:30 மணிக்கு, பக்தி சொற்பொழிவு, நாதஸ்வர இசைக்கச்சேரி, சென்னை மகளிர் பக்தி பாடல்கள் நடந்தது.