பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
11:04
சேலம்:சேலம், நெத்திமேடு காளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் நடந்தது. சேலம், நெத்திமேடு காளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடந்து வருகிறது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று, நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. கரியபெருமாள் கோவில் மண்டபத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், காளியம்மன் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, காளியம்மன், துர்க்கையம்மன், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று மாலை 5 மணியளவில், 108 திருவிளக்கு பூஜை மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.