பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
11:04
நாமக்கல்: செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, இன்று (ஏப்., 30) துவங்குகிறது. நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, இன்று (ஏப்., 30) காலை 8 மணிக்கு, ஓம்சக்தி மன்றத்தின் சார்பில், பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. நாளை (மே 1) இரவு 7 மணிக்கு வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜை நடக்கிறது. மே 2ம் தேதி இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே 3ம் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல், மாவிளக்கு, அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 4ம் தேதி காலை 9 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், மாலை 4 மணிக்கு வண்டி வேஷம் நடக்கிறது. மே 5ம் தேதி மாலை 3 மணிக்கு குதிரை வாகனத்தில்அம்மன் மஞ்சள் நீராடுதல், மூஷிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம், கம்பம் எடுத்தல், வாண வேடிக்கையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.