பதிவு செய்த நாள்
11
பிப்
2020
01:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில், நடப்பு ஆண்டுக்கான தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது.
விழாவையொட்டி, இன்று இரவு, 9:00 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 17ம் தேதி அணி எடுப்பு, 18ம் தேதி கரியகாளியம்மன் அபிஷேகம், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும், 19ம் தேதி கரியகாளியம்மன் கோவில் பண்டிகை, 21ம் தேதி கரியகாளியம்மன் கடைசி நாள் அபிஷேகமும் நடக்கிறது.வரும், 25ம் தேதி பூவோடு வைத்தல், 29ம் தேதி கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.மார்ச் 1ம் தேதி ஏ.பி.டி., பூவோடு நிகழ்ச்சியும், வரும் 3ம் தேதி அபிஷேகம், 4ம் தேதி காலை மாவிளக்கு, திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு வெள்ளி தேரோட்டம் வடம் பிடித்தலும் நடக்கிறது. மூன்று நாள் தேரோட்டத்துக்கு பின், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது.