கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண்கள் கிராம தேவதையான காமட்டான் வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் பாரம்பரியமாக பெண்கள் காமட்டான் எனும் கிராம தேவதை வழிபாடு நடத்தி வருவது வழக்கமாக உள்ளது. பெண்கள் பூப்பெய்தல், திருமண தோஷம் நீக்குதல், தடையராத தாலி பாக்கியம் ஆகியவைகளை வேண்டுதலாக வைத்த காமட்டான் வழிபாடு நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் காமட்டான் எனும் கிராம தேவதை சிலை செய்து வழிபட்டனர். தெருவின் நடுவே வைத்து நேற்று முன்தினம் இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு பழம், பூ, இனிப்பு, புடவை, ஜாக்கெட் போன்ற பொருள்களை வைத்து வழிபட்டனர். ஏராளமான பெண்கள் நடனம் ஆடியும், பாடல்களை பாடியும் வழிபாட்டினை நடத்தினர்.