காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்க பல இடுங்களில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் நிரம்பியதால், நேற்று கோவில் நிர்வாகம் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.கோவில் அதிகாரி சுபாஷ். கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.