மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வீட்டில் சுபநிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2020 04:02
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி நேயர்களே!
குருபகவான் சாதகமான இடத்தில் இருந்து நற்பலனை வாரி வழங்குகிறார். சுக்கிரன் பிப்.29 க்கு பிறகு நன்மை தருவார். புதன் பிப்.22 – மார்ச்11 வரை வக்கிரம் அடைந்து மகர ராசியில் இருப்பதால் நன்மை தருவார். குருவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும்.
குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சுக்கிரனால் மாத பிற்பகுதியில் பண வரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். பிப்.22 வரையும், மார்ச்11 க்கு பிறகும் புதனால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அண்டை வீட்டாரால் பிரச்னை வரலாம்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். பிப்.22 – மார்ச்11 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள் * தொழிலதிபர்கள் விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பர். * வியாபாரிகள் புதிய உத்திகளைப் பின்பற்றி வியாபாரத்தை பெருக்குவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் விற்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பிப்.22 – மார்ச்11 வரை சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். * ஐ.டி., துறையினருக்கு கடந்த காலத்தில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். * வக்கீல்கள் பிப்.22 – மார்ச்11 வரை சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். * ஆசிரியர்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். * கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். கடந்தகாலத்தில் ஏற்பட்ட அவப்பெயர், பொல்லாப்பு போன்றவை பிப்.22 க்கு பிறகு மறையும். அதன்பின் செல்வாக்கு அதிகரிக்கும். * விவசாயிகளுக்கு கால்நடைச்செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் வருமானம் பன்மடங்கு பெருகும். * பள்ளி மாணவர்கள் பிப்.22ல் இருந்து கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். * கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும். தீய நண்பர்களிடம் இருந்து விலகுவர்.
சுமாரான பலன்கள் * தொழிலதிபர்கள் மார்ச்11 க்கு பிறகு வீண் அலைச்சலுக்கு ஆளாவர். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் தங்க நேரிடும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணவிரயத்திற்கு ஆளாகலாம். * வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். சிலருக்கு எதிரிகளால் பிரச்னை வரலாம். * தரகு, கமிஷன் தொழிலில் வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்கு பலன் கிடைக்காமலும் போகலாம். * மின்சாரம், நெருப்பு தொடர்பான பணிபுரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். * மருத்துவர்கள் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர். பணியில் கூடுதல் அக்கறை தேவை. வீண்செலவு அதிகரிக்கலாம். * அரசு பணியாளர்கள் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப் பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடக்கவும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பிறர் உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைப்பது நல்லது. * அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பு மரியாதை கிடைக்காது. * பொதுநல சேவகர்கள் தீய பெண்களின் சேர்க்கையால் அவப்பெயரையைச் சந்திக்கலாம். கவனம். * விவசாயிகள் கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.
நல்ல நாள்: பிப்.16,17,18,19,20,26,27,28,29, மார்ச் 4,5,8,9 கவன நாள்: பிப். 21,22 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: மஞ்சள், பச்சை
பரிகாரம்: * தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் * செவ்வாயன்று துர்க்கைக்கு அர்ச்சனை * வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்தீபம்