பதிவு செய்த நாள்
11
பிப்
2020
04:02
உற்சாகமுடன் பணியாற்றும் ரிஷப ராசி நேயர்களே!
இந்த மாத தொடக்கத்தில் சூரியனும், புதனும் 10ம் இடத்தில் இணைந்திருப்பதால் எண்ணற்ற நன்மை கிடைக்கும். சுக்கிரன் மார்ச் 1 வரை நன்மை தருவார். புதன் பிப்.22 – மார்ச் 11 வரை வக்கிரம் அடைந்து மகர ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான இடம் தான். குடும்பத்தில் தேவைக்கு வருமானம் இருக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். புதனால் முன்னேற்றங்களை காணலாம். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும். வசதி வாய்ப்பு பெருகும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிப்.22 – மார்ச் 11 வரை எதிலும் விட்டுக் கொடுத்து போகவும். சனி பகவானால் வீண் அலைச்சல் ஏற்படலாம். அண்டை வீட்டாரால் பிரச்னை ஆளாக நேரிடும்.
பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்குவர். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவால் நன்மை கிடைக்கும். சுக்கிரனால் அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும். சேமிக்கும் வித்ததில் பணப்புழக்கம் கூடும்.
வயிறு, கண் தொடர்பான உபாதைகள் பூரண குணம் அடையும். செவ்வாயால் உஷ்ண வியாதிகள் வரலாம். சிலருக்கு பொருள் விரயம் ஏற்படலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு குருவின் பார்வையால் பண வரவு அதிகரிக்கும். மந்த நிலை மறையும். துணிச்சல் பிறக்கும். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
* வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
* தனியார் துறையில் பணிபுரிவோருக்கு மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் திறமை பளிச்சிடும். வீண் மனக்கவலை மறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.
* ஐ.டி., துறையினர் சீரான வளர்ச்சி காண்பர். மார்ச்11க்கு பிறகு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் முக்கிய வழக்குகளில் மார்ச்11 க்கு பிறகு சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* பொதுநல சேவகர்கள் பணியில் திருப்தியான நிலையைக் காண்பர். எதிர்பார்த்தபடி புகழ், பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* விவசாயிகள் பாசிப்பயறு, நெல், கோதுமை, பழவகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். வழக்கு, விவகாரங்களில் முடிவு திருப்திகரமாக இருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
* பள்ளி மாணவர்கள் புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
* கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மார்ச் 11க்கு பிறகு கல்விக்கடன், கல்வி உதவித்தொகை போன்றவை கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களில் சிலர் பிப்.22 – மார்ச் 11 வரை சிலர் தீயோர் சேர்க்கையால் பணஇழப்பை சந்திக்கலாம் கவனம்.
* தரகு,கமிஷன் தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் ஆதாயம் அளிக்காது.
* அரசு பணியாளர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
* மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்குரிய வருமானம் ஓரளவு எதிர்பார்க்கலாம்.
* ஆசிரியர்களுக்கு குருபகவானால் பணியில் நிலையற்ற தன்மை உண்டாகும். சிலருக்கு பொருளாதார சரிவு, வீண்விரோதத்தை ஏற்படுத்துவார்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. ராகுவால் திடீர் பிரச்னை, வீண்செலவுக்கு ஆளாகலாம். சிலர் களவு கொடுக்க நேரிடும்.
நல்ல நாள்: பிப்.14,15,16,17,23,24,25,26,27 மார்ச் 1,2,3,6,7,12,13
கவன நாள்: பிப்.18,19,20 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்:சிவப்பு, பச்சை
பரிகாரம்:
* வெள்ளியன்று நாகதேவதைக்கு நெய் தீபம்
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை