ஈரோடு: எல்லைமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு, நக்கீரர் வீதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், பாலமுருகர், புது எல்லைமாரியமன் கோவிலின் கும்பாபாபிஷேக முதலாம் ஆண்டு விழா கடந்த, 10ல் மகம் நட்சத்திரத்தில் நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் திரவிய அபிஷேகம் மஹா தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.