திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2020 10:02
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் - ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவத்தை முன்னிட்டு 5 நாட்கள் விழா நடைபெறும். பிப்.7ல் ஆண்டாள் பெரிய சன்னதி எழுந்தருளி விழா துவங்கியது.தொடர்ந்து நவகலச அலங்கார சவுரி திருமஞ்சனம், தைலம் திருவீதி உலா, ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை, ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தன. நேற்று முன்தினம் காலை மூலவருக்கு திருமஞ்சனம்,சாத்துப்படி நடந்து, ஏகாதசி மண்டபத்தில் உற்ஸவர் பெருமாளை பெரியாழ்வார் எதிர் கொண்டு அழைத்தார். பின்னர் பெருமாளுக்கு விரத பட்சணம் அளிக்கப்பட்டது.
மாலை 4:00 மணிக்கு ஆண்டாள் கல்யாண சீர்வரிசை பொருட்களுடன் மேற்கு கோட்ட வாயில் வழியாக திருவீதி புறப்பாடு துவங்கியது.பின்னர் ஊஞ்சலில் பெருமாளுக்கு பட்டு சாத்தி ஊஞ்சலில் மாலை மாற்றுதல் நடந்தது. தொடர்ந்து பெருமாளும்,ஆண்டாளும் திருக்கல்யாண மண்டபம்எழுந்தருளினர்.ஹோமம், பூஜை நிறைவேறி இரவு 7:50 மணிக்கு திருக்கல்யாணம் நிறைவடைந்தது. பின்னர் பெருமாளும், ஆண்டாளும் மணக்கோலத்தில் வீதி வலம் வந்தனர்.