பதிவு செய்த நாள்
13
பிப்
2020
11:02
திருப்போரூர்: மேலக்கோட்டையூர் தேவி கருமாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூரில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், சமீபத்தில் திருப்பணிகள் முடிந்தன. இதையடுத்து, நேற்று காலை, 9:30 மணிக்கு, மூலவர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக, விழாவை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, நான்கு கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.