பதிவு செய்த நாள்
19
பிப்
2020
10:02
ஆர்.கே.பேட்டை : அனுமனுக்கு உகந்த மூலம் நட்சத்திர தினத்தில், நடத்தப்பட்ட லட்சார்ச்சனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை முதல், இரவு வரை தொடர்ந்து பாராயணம் நடந்தது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் மற்றும் சஞ்சீவிபுரம் இடையே அமைந்துள்ளது பழமையான பக்த அனுமன் கோவில். சுயம்புவாக ஒரு கல்லில் தோன்றிய அனுமன் சிலை, மூலவராக அமைந்துள்ளது சிறப்பு.கடந்த ஆண்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, லட்சார்ச்னை நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.பக்தர்கள் எதிர்பார்ப்பின்படி, நேற்று, அனுமனுக்கு உகந்த மூலம் நட்சத்திர தினத்தில், காலை முதல், இரவு வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. பத்து பிரிவுகளாக நடத்தப்பட்ட அர்ச்சனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவை ஒட்டி, குடிநீர், உணவு என, பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வங்கனுார், ஆர்.கே.பேட்டை, சிங்கசமுத்திரம், சஞ்சீவிபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.