பதிவு செய்த நாள்
19
பிப்
2020
10:02
உத்திரமேரூர் : பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள, அதிகார நந்தி வாகனத்தின், கரிகோலம் எனப்படும் வெள்ளோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பழமையான பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், 3 லட்சம் ரூபாய் செலவில், அத்தி மரத்தால், புதிய அதிகார நந்தி வாகனம் செய்யப்பட்டு உள்ளது.இந்த வாகனத்தின், கரிகோலம் எனப்படும் வெள்ளோட்டம், இன்று மாலை நடைபெறுகிறது. பல்வேறு பூஜை மற்றும் யாகத்திற்கு பின், மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ளது. பின், புதிய வாகனத்தின் உபயதாரர்களான, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழுவினர், கோவில் தர்மகர்த்தாக்கள் முன்னிலையில், அதிகார நந்தி வாகனத்தை முறைப்படி ஒப்படைக்க உள்ளனர்.வரும், தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்., 14 அன்று, சிவபூத கண திருக்கயிலாய வாத்தியம் முழங்க, பட்டுவதனாம்பிகையுடன் பிரம்மபுரீஸ்வரர், புதிய அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வர உள்ளார்.