முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2020 10:02
ஓமலூர்: முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கவுள்ளது. ஓமலூர், தொளசம்பட்டியில் உள்ள ராஜகணபதி, முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கவுள்ளது. கடந்த, 14ல், முகூர்த்தகால் நடல், முளைப்பாலிகை போடுதலை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொளசம்பட்டி பிரதான சாலையில் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று இரவு, 10:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை காலை, 5:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.