தேவாரம்: கேரளா, இடுக்கி மாவட்டம் கைலாசப்பாறையில் பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். நேற்று, பண்ணைப்புரம் பொம்மையசாமி கோயிலில் இருந்து சிவபார்வதி கோயில் பாதயாத்திரை கமிட்டி தலைவர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையில் ஏராளமானோர் பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.தேவாரம் சக்கனகுண்டு மலையடிவாரத்தில் உள்ள அழகர் கோயில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற பின், சாக்குலுாத்து வனப்பாதை வழியாக சிவபார்வதி கோயில் சென்றடைந்தனர். ஆர்.எஸ்.எஸ்., மாவட்டத்தலைவர் சுந்தரேசன், அன்னதானம் வழங்கினார்.