பதிவு செய்த நாள்
25
பிப்
2020
01:02
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருவயலில் ரணபலி முருகன் கோயிலில் மாசி மகம் உற்ஸவம் இன்று (பிப்.25)ல் தொடங்கு கிறது. மார்ச் 8ல் தேரோட்டம் நடக்கிறது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் மாசி மகம் உற்ஸவம் இன்று இரவு 9:00 மணிக்கு முப்பிடாரி அம்மன் காளியூட்டத்துடன் தொடங்குகிறது. நாளை காலை7:00 மணிக்கு அனுக்ஞை, காப்புக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிப்.28ல் காலை 9:00 மணிக்கு கொடியேற்றமும், மாலை அன்னவாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில்காலை பல்லக்கு, இரவு மஷே, பூத, கைலாச, யானை, மயில், புஷ்ப வாகனங்களில்சுவாமி வீதியுலா நடக்கிறது. மார்ச் 5 ல் சுவாமிக்கு முதல் காலத்தில் சிவப்பு, 2 ம் காலத்தில்வெள்ளை, 3ம் காலத்தில் பச்சை அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மார்ச் 8ல் காலை 10:30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுதல், பின் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 9ல் காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளிவீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலாளர் பழனிவேல்பாண்டியன், பொறுப்பாளர் ராமு, கண்காணிப்பாளர் சுரஷே் ஆகியோர் செய்து வருகின்றனர்.